உருளைக்கிழங்கு பூரி



என்னென்ன தேவை?
 
கோதுமை மாவு - 1 கப்,
ரவை - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
உருளைக்கிழங்கு - 2, சீரகம் - 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது,
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
ஓமம் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
 
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசிக்கவும். கோதுமை மாவுடன் (எண்ணெய் தவிர) உருளைக்கிழங்கு, மற்ற அனைத்து பொருட்கள், சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து பூரியாக இட்டு, கடாயில் எண்ணெயை காயவைத்து பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.