உருளைக்கிழங்கு அல்வா



என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு துருவல் - 2 கப்,
சர்க்கரை - 1 கப்,
நெய் - 1 கப்,
விருப்பமான ஃபுட் கலர் - 1 சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
பச்சை கற்பூரம் - சிறிது,
இரண்டாக உடைத்த முந்திரி - 15.

எப்படிச் செய்வது?

சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு பாகாக காய்ச்சி கொள்ளவும். அடிகனமான கடாயில் 1/2 கப் நெய் விட்டு துருவிய உருளைக்
கிழங்கை போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் சர்க்கரைப் பாகை விட்டு கைவிடாமல் கிளறி, மீதமுள்ள நெய்யை போட்டு கிளறி கொண்டே இருக்கவும். ஃபுட் கலர் சேர்க்கவும். நன்கு வெந்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு அல்வா பதத்திற்கு வரும்பொழுது ஏலக்காய்த்தூள், பச்சை கற்பூரம் சேர்த்து கிளறி இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால் பால் சேர்த்தும் கிளறலாம்.