ஃப்ளோட்டிங் பொட்டேடோஸ்



என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
சிவப்பு காராமணி - 50 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
தக்காளி - 4,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் - 1/4 கப்,
முந்திரிப்பருப்பு - 10,
கசகசா - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவையுங்கள். தக்காளியை வெந்நீரில் போட்டு சில நிமிடங்கள் ஆனதும் தோலை உரித்து அரைத்து வடிகட்டவும். காராமணியை வேகவைத்துக் கொள்ளவும். முந்திரி கசகசாவை தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து விழுதாக அரைக்கவும். வெந்த உருளைக்கிழங்கை குறுக்காக நறுக்கி நடுப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு குடைந்து கொள்ளவும். குடைந்து உருளையை மசித்து வைக்கவும்.
 
கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் வெங்காயம் சேர்த்து வதக்கி, வெந்த காராமணி, உப்பு, மிளகாய்த்தூள், மசித்த உருளையை சேர்த்து கிளறவும். இந்த மசாலாவை குழி செய்துள்ள உருளைக்கிழங்கில் நிரப்பி, அதன் மீது மற்றொரு பாதி உருளைக்கிழங்கை வைத்து மூடி மத்தி யில், சோள மாவில் சிறிது தண்ணீர் கலந்து பேஸ்ட்டாக செய்து ஒட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
 
சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, தனியாத்தூள், உப்பு, மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் ேசர்த்து தனியாக வதக்கி, முந்திரி கசகசா விழுதை சேர்த்து கிளறவும். தக்காளி சாற்றை ஊற்றி பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும். மிதமான தனலில் வைத்து பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி இறக்கவும். கடைந்த ஃபிரெஷ் கிரீம், கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.