உருளைக்கிழங்கு கடலை உசள்



என்னென்ன தேவை?

வேகவைத்த வேர்க்கடலை - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 3 (பெரிய துண்டாக நறுக்கவும்),
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
பச்சைமிளகாய் - 3,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைப்பழச்சாறு - 1/2 பழம்,
துருவிய முட்டைக்கோஸ்,
கேரட் - 1/4 கப்.

தாளிக்க...

கடுகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்.

அலங்கரிக்க...

தேங்காய்த்துருவல்- 3 டேபிள்ஸ்பூன்.
 
எப்படிச் செய்வது?

நறுக்கிய உருளைக்கிழங்கை ஒரு வேக்காடு வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், வெள்ளை எள், பச்சைமிளகாய் தாளித்து முட்டைகோஸ் + கேரட் துருவல், உப்பு சேர்த்து கிளறி, வெந்த உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும். வேர்க்கடலையை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கிளறி, கரம்மசாலாத்தூள் போட்டு மூடிவைத்து வேகவிடவும். பின்பு வெந்ததும் இறக்கும்பொழுது சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை போட்டு கிளறி இறக்கவும். தேங்காய்த்துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.