ஆலு டிக்கி



என்னென்ன தேவை?
 
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
துருவிய காலிஃப்ளவர் - 1/4 கப்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
எண்ணெய் - சிறிது,
இஞ்சி+மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்,
தக்காளி - 2 (விழுதாக அரைக்கவும்),
உப்பு - தேவைக்கு, அவல் - 2 டேபிள்ஸ்பூன்,
துருவிய வெங்காயம் - 1.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். இத்துடன் காலிஃப்ளவர், அலசிய அவல், இஞ்சி+மிளகாய் விழுது, உப்பு, கொத்தமல்லித்தழை, வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து பிசைந்து விருப்பமான வடிவங்களில் செய்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டும் சுடலாம்.