உருளை சாபுதானா வடை



என்னென்ன தேவை?
 
உருளைக்கிழங்கு - 5,
ஜவ்வரிசி - 1 கப்,
எலுமிச்சைச்சாறு - 1/2 பழம்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை - சிறிது,
முந்திரிப்பருப்பு - 20.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊறவைக்கவும். முந்திரியை தனியாக ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து அரைத்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்கில் அரைத்த ஜவ்வரிசி, முந்திரி கலவை, உப்பு, கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், சோம்பு, எலுமிச்சைச்சாறை சேர்த்து பிசையவும். சிறு உருண்டையாக எடுத்து வடையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.