உருளை இன்ஸ்டன்ட் டோக்லா



என்னென்ன தேவை?

தோசை மாவு - 1 கப்,
ரவை - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
வேகவைத்து சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 1/2 கப்,
இட்லி மிளகாய்ப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க...
 
கடுகு, கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயம் - சிறிது,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

தோசை மாவில் ரவை, இட்லி மிளகாய்ப்பொடி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து கலந்து, தாளிக்க கொடுத்த பொருட்களையும் தாளித்து கொட்டி கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெயை தடவி மாவை ஊற்றி ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும். விருப்பமான பாத்திரத்தில் மாவை ஊற்றி விருப்பமான வடிவத்திலும் வேகவைத்து எடுக்கலாம்.