உருளை பீட்சா தோசை



என்னென்ன தேவை?
 
மைதா + கோதுமை மாவு - 1/2 கிேலா,
அரிசி மாவு - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
ரவை - 1/4 கப்,
நறுக்கிய தக்காளி - 1/4 கப்,
குடைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,

உதிர்த்து வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - சிறிது,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 1 கப்,
பச்சைமிளகாய் சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?
 
உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும். அனைத்து மாவையும் ஒன்றாகப் போட்டு, உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் விட்டு அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் தக்காளி, வெங்காயம், ஸ்வீட் கார்ன், முந்திரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, வெண்ணெய், கிரீன் சில்லி சாஸ் போட்டு கலந்து வைக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமான தோசையாக ஊற்றி, அதன் மீது கலந்த கலவையை பரப்பி, கொத்தமல்லித்தழை தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவைத்து வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.