உருளைக்கிழங்கு குல்ச்சா



என்னென்ன தேவை?

மைதா - 1 கப்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 2,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, நெய் - தேவைக்கு,
சமையல் சோடா - 1 சிட்டிகை,
சர்க்கரை - 1 சிட்டிகை,
வெதுவெதுப்பான பால் - மாவை பிசைய தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
 
குக்கரில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சூடாக இருக்கும்போதே மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, வெண்ணெய், சர்க்கரை, உருளைக்கிழங்கு, மிளகுத்தூள், சமையல் சோடா போட்டு பால் தெளித்து மிருதுவாக பிசையவும். சிறு சிறு உண்டையாக எடுத்து சப்பாத்தியாக இடவும். சூடான கல்லில் சப்பாத்தியை போட்டு இருபுறமும் சிறிது நெய் விட்டு வெந்ததும் சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.