உருளைக்கிழங்கு பிரெட் டோஸ்ட்



என்னென்ன தேவை?

சதுரமாக நறுக்கி வேகவைத்த உருளைக்கிழங்கு - 1 கப்,
பிரெட் துண்டுகள் - 8,
உப்பு, வெண்ணெய் - தேவைக்கு,
சீஸ் துண்டுகள் - 4,
வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 1/4 கப்.
கொத்தமல்லி சட்னி - 1/4 கப் (கொத்தமல்லி 1/4 கட்டு + பச்சைமிளகாய் + உப்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.)

எப்படிச் செய்வது?

இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்து அதில் வெண்ணெயை தடவி வைக்கவும். ஒரு பிரெட்டின் அடியில் பச்சை சட்னி தடவி அதன் மீது ஸ்வீட் கார்ன் போட்டு, மிளகு கலந்த உருளைக்கிழங்கை தூவி, அதன் மீது சீஸ் துண்டு வைத்து, அதன் மீது மற்றொரு பிரெட் துண்டு வைத்து பிரெட் டோஸ்டரில் டேஸ்ட் செய்யவும். டோஸ்டர் இல்லையென்றால் தோசைக் கல்லில் எண்ணெய் அல்லது நெய் சிறிது விட்டு இந்த பிரெட்டை போட்டு டோஸ்ட் செய்து பரிமாறவும்.
 
குறிப்பு: உருளைக்கிழங்கு துண்டுகளில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து பிசறி 10 நிமிடத்திற்கு வைத்து பிறகு உபயோகிக்கவும்.