ஆலு புஜியா



என்னென்ன தேவை?

பெரிய உருளைக்கிழங்கு - 3,
அரிசி மாவு - 1/4 கப்,
கடலை மாவு - 1 கப்,
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
ஓமம் - 1/2 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மாங்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். இத்துடன் அனைத்துப் பொருட்கள் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும். ஓமப்பொடி அச்சில் மாவைப் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுத்து பரிமாறவும்.