அசத்தும் உருளை ரெசிபிஸ்...



சிக்கனையும் உருளைக்கிழங்கையும் எந்த விதத்தில் சமைத்தாலும் ருசியாக இருக்கும் என்று சொல்வார்கள். உலகெங்கிலும் அதிகம் விரும்பப்படும் சமைக்கப்படும் காய்கறிகளுள் முக்கியமானது உருளை. அதில் வித்தியாசமான 30 வகைகளை நமக்காக செய்து காட்டி இருக்கிறார் சுதா செல்வகுமார். M.Com படித்திருந்தாலும் சமையலிலும் கைவினைப்பொருட்கள் செய்வதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

எஸ். எஸ். ஆர்ட்ஸ் & க்ராஃப்ட்ஸ் என்ற பெயரில் வகுப்புகள் எடுத்து வருகிறார். பெண்களுக்கு பலவித கைவினைப்பொருட்கள் சொல்லித் தருவதோடு கேக், ஐஸ்கிரீம், சாக்லெட் செய்வது எப்படி என்றும் வகுப்புகள் எடுத்து வருகிறார். பலவித சமையல் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகள் வாங்கி உள்ளார். பலவிதமான இதழ்களில் தொடர்ந்து சமையல் பற்றி எழுதி வருகிறார்.

எழுத்து வடிவம்: கலையரசி
தொகுப்பு: ஸ்ரீதேவிமோகன்
படங்கள்: ஆர்.கோபால்

சமையல் கலைஞர்
சுதா செல்வகுமார்