ப்ரியங்குளடன்...
*சாக்லெட் வீடு பற்றிய செய்தியை படித்தேன். நாக்கில் எச்சில் ஊறியது. தமிழ்நாட்டில் இதுபோல் வீட்டை கட்டினால் சிறுவர், சிறுமிகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் சந்தோஷம் அடைவார்கள். - பி.ஜெரிக், சென்னை.
*நாயை பணம் கொடுத்து வாங்கலாம்! ஆனால், அதன் வாலை ஆட்ட வைக்க முடியாது. அன்பால் மட்டுமே முடியும் என்பதை கலைவாணி சொக்கலிங்கம் எழுதிய ‘நாய் விற்ற காசு’ சிறுகதை அற்புதமாக உணர்த்தியது. - ம.அரங்கநாதன், குரோம்பேட்டை.
*கொலஸ்ட்ராலை குறைத்து இதய அடைப்பையும், ரத்தக் கொதிப்பையும் கட்டுப்படுத்தும் வெந்தயத்தின் மருத்துவ பயன்களை விளக்கமாக சொன்ன தோழிக்கு நன்றி. - கோகிலா, திருவாரூர்.
*பீடி குடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு போல் பீடி சுற்றுபவர்களுக்கும் நுரையீரல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு ஏற்படுகிறது என தெரிந்தும் வாழ்வாதாரத்தால் அதனை செய்து வருவது வேதனையாகத்தான் உள்ளது. - டி.முருகேசன், கங்களாஞ்சேரி.
*ஆண்டவனுக்கு ஆடைகளை உருவாக்குகிற பணியில் பெண்கள் ஈடுபட்டு செயலாற்றுவதை நேர்த்தியாக விவரித்த கட்டுரை அற்புதம். அன்னை பராசக்தியின் மூன்று தெய்வீக சக்திகளில் இச்சா சக்தி நிறைந்து அருளாட்சி புரிந்து வரும் மேலூர் திருவுடையம்மன் ஆலயத்தை தரிசிக்க வைத்த கட்டுரை பரவசத்தில் ஆழ்த்திவிட்டது. - அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை.
*நடிகை அபி நட்சத்திரா இந்த சிறு வயதில் இவ்வளவு முன்னேறி இருப்பது வியப்பைத் தந்தன. நாலு இடங்கள் ஏறி இறங்கி வேலை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படாமல் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டார் பேக்கர் சோனம் சவுத்திரி. - பொன்னியம்மன்மேடு வண்ணை கணேசன், சென்னை.
*மதுரையில் திருமதி கவிதா அவர்களின் முயற்சியால் பொழுது ேபாக்க சிறந்த சவுண்ட் சிஸ்டமுடன் திரையரங்கம் அமைத்ததற்கு வாழ்த்துகள். - கதிர்வேல் மல்லிகா, மதுரை.
*பெண் குழந்தைகளின் மன அழுத்தம் போக்க வேண்டியது பெற்றோர்களின் முக்கியமான கடமை என ‘தோழி’ உணர்த்தியுள்ளாள். மகாசிவராத்திரியின் மகிமையை அறியத் தந்த கட்டுரை அருமை. - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
*ஆரோக்கிய ஸ்பெஷலாக வலம் வந்து உள்ளம் நெகிழ வைத்தது மட்டுமின்றி ஆரோக்கியத்தின் மேன்மையை மென்மையாக எடுத்துரைத்த விதம் அதி உன்னதம். பக்கங்கள் 100ம் படிக்க படிக்க சுவையாக இருந்தது. - இரா. ராஜேஸ்வரி, திருச்சி.
அட்டைப்படம்: பிரீத்தி ஷர்மா, புகைப்படம்: கேமரா செந்தில்
|