பட்டு தாவணிபாவாடை, தாவணி என்றாலே பல மைல்கள் ஓடி விடுகிறார்கள் இக்கால டீன் கண்மணிகள். எந்த உடைக்கும் வயது ஒரு எல்லையே கிடையாது. ஆனால் பாவாடை, தாவணிக்கு மட்டும் 15 முதல் திருமணம் ஆவதற்கு முன்பு வரை மட்டுமே என வயது வரம்பு உண்டு. அதன் பிறகு போடக்கூடாதா என்றால் போடலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகான நம் உடல் மாற்றங்கள், கைகள் மற்றும் இடைப்பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் என பாவாடை- தாவணிக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்காது. அதிலும் லெஹெங்கா போன்ற தாவணிகளை கூட அணியலாம்.

ஆனால் இந்த டிரெடிஷனல் பாவாடை, தாவணி எனில் அது திருமணத்திற்கு முன்பு வரை மட்டுமே. ஆனால் பல பெண்கள் அதை அனுபவிக்காமலேயே இளம் வயதைக் கடந்து விடுகிறார்கள். எனினும் இவர்களை ஈர்க்க ஏகப்பட்ட வெரைட்டி பாவாடை, தாவணிகள் வந்துகொண்டுதான் உள்ளன. அவ்வளவு அழகும், சிறப்பும் உண்டு இந்த பாவாடை, தாவணிக்கு மட்டும்.

பேஜ் நிற பாவாடை மற்றும் சிவப்பு நிற தாவணி
புராடெக்ட் கோட்: 2241-BCL_08N
www.sareeo.com

விலை: ரூ.2390