ஃப்ரிட்ஜை பராமரிப்பது எப்படி?
* ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூடுவதால் மின்சார செலவு அதிகமாகிறது. அடிக்கடி திறந்து மூடுவதை குறைத்துக்கொண்டால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
* ஃப்ரிட்ஜின் பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்காமல் இருப்பது நல்லது. மற்றும் அதன்மேல் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* பின்புறம் படியும் ஒட்டடையை அடிக்கடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுத்தப்படுத்தி வைத்தால் நிறைய அழுக்கு சேராமல் இருக்கும்.
* ஃப்ரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஸ்பான்ச் போன்றவற்றை கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க ேவண்டும். மற்றும் ஃப்ரிட்ஜை சுத்தமாக காலி செய்துவிட்டு கதவுகளை காற்றாடத் திறந்து வைத்துவிட்டால் ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருக்கும்.
* ஐஸ் டிரேயை பழைய குக்கர் கால்கெட் மீது வைத்தால் எளிதில் எடுக்க வசதியாக இருக்கும்.
* ஐஸ்கட்டி வைக்கும் டிரேயை முதலில் வெந்நீரை விட்டு கழுவி பிறகு நீர் விட்டு வைத்தாலும் டிரேயில் இருந்து எடுப்பதற்கு சுலபமாக இருக்கும் . * ஃப்ரிட்ஜ் திடீரென்று ஓசை எழுப்பினால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும். அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்காமல் இருக்கும் இடத்திற்கேற்ப பொருட்களை வைக்கலாம்.
* ஃப்ரிட்ஜுக்கு கண்டிப்பாக எர்த் கனெக்ஷன் கொடுக்க வேண்டும்.
* ஃப்ரிட்ஜை சுத்தப்படுத்துவதற்கு சோப்பு நீரை உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் சோப்பு நாளடைவில் உட்சுவர்களை உடைத்துவிடும். இதற்குப்பதில் சோடா உப்பு கலந்த நீரை உபயோகிக்கலாம்.
* உணவுப் பொருட்களை சூட்ேடாடு வைக்காமல் குளிர வைத்தபின்தான் வைக்க வேண்டும்.
* ஃப்ரிட்ஜ் துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சை பழ மூடிகளையோ வைக்கலாம்.
* தயிரிலிருந்து வெண்ணெய் எடுப்பதற்கு தயிரை கடைந்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால் வெண்ணெய் தானே தனியாக பிரிந்துவரும்.
* சப்பாத்தி மாவின் மேல் சிறிது ரீபைண்டு ஆயிலை தடவி ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நான்கு நாட்களானாலும் பிரஷ்ஷாக இருக்கும்.
* வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்துவிட்டால் நறுக்கும்போது கண் கலங்காது.
* ஃப்ரிட்ஜில் வைத்துள்ள காய்கறிகளை சமைப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே எடுத்து வைத்துவிட்டு சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும்.
* காய்கறிகளை நறுக்கி அப்படியே ஃப்ரிட்ஜில் வைக்காமல் பாலிதீன் கவரில் போட்டு வைத்தால் வைட்டமின் சத்துக்கள் அப்படியே இருக்கும்.
* முழு தேங்காயை ஃப்ரீசரில் அரைமணி நேரம் வைத்துவிட்டு உடைத்தால் டக்கென உடைந்துவிடும்.
* வெண்ணெய், பால் கட்டி போன்ற பால் உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில்தான் வைக்க வேண்டும். அப்படி வைத்தால்தான் அதிலுள்ள சத்து குறையாமல் இருக்கும்.
* கத்தரிக்காயை எப்போதும் காகிதப் பையில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
* பழங்களை அப்படியே ஃப்ரிட்ஜுக்குள் அடுக்கி வைக்காமல் ஒரு பிளாஸ்டிக் உறையிலோ அல்லது டப்பாவிலோ போட்டு வைக்கலாம். பழங்கள் சுருங்கிப் போகாது.
* வெண்டை, அவரை, பட்டாணி போன்றவை நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்க வேண்டுமானால் ஃப்ரிட்ஜில் பழுப்புநிற அட்டையில் சுற்றி வைக்க வேண்டும்.
- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
|