வசம்பு...வாசகர் பகுதி

* வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து மட்டுமல்ல... பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

* வசம்பு...  எப்பேர்ப்பட்ட கொடிய நச்சுத் தன்மையையும் போக்கக்கூடியது.

* வசம்பைத் தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும்.

* வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

* வசம்பு கால்நடைகளுக்குத் தொற்று நோய்கள் வராமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.

* காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்.

* வசம்பு ‘பிள்ளை வளர்ப்பான்’ என்ற பெயர் பெற்றுள்ளது.

* சுடு தண்ணீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாகவும் அனைவருக்கும் பயன்படுத்தலாம்.

- சு.இலக்குமணசுவாமி, மதுரை-6.