ஊசிமுனை ஓவியங்கள்



-செல்வி மோகன்

ஷர்தோஷி எம்போசிங்

ஒரே வண்ணத்தில் எடுக்கப்பட்ட உடையில் நம் எண்ணங்களுக்கு ஏற்ப வடிவங்களை வரைந்து ஷர்தோஷி கொண்டு எம்போசிங் செய்தால் அந்த உடை பார்ப்பதற்கு கொள்ளை அழகாக மாறிவிடும். பிறகென்ன ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். நாம் உடுத்தும் உடைதான் நமக்கு கூடுதல் அழகை தந்து மற்றவர் முன் நம்மை தன்னம்பிக்கை நடைபோட வைக்கும்.

ஷர்தோஷி கொண்டு ஆடைகளை எவ்வாறு அழகூட்டுவது என்ற செய்முறை விளக்கத்தை தோழி வாசகர்களுக்காக செய்து காட்டுகிறார் மோகன் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் அதன் பயிற்றுநர் அனுராதா.