ப்ரியங்களுடன்...
ஏதோ சுவாரஸ்யத்திற்காகவும் புகழுக்காகவும் பொருளுக்காகவும் எழுதாமல், தன் வாசகர்கள் நலன் கருதி, சில வரையறைகளை வகுத்துக்கொண்டிருப்பதே ரமணிச்சந்திரனின் வெற்றியின் சூட்சுமம். - கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
நடிகைகள் நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளை தாண்டி உடல் தானம் பண்ணும் நந்திதா ஒரு மாறுபட்ட நடிகைதான். - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
சரும நல நிபுணர் வானதி திருநாவுக்கரசுவின் சரும பாதுகாப்பு குறித்த கட்டுரை, சரும பாதுகாப்பு குறித்து நல்ல பல ஆலோசனைகளை வழங்கியிருந்தது. நன்றி. - வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி.
டெசர்ட்ஸ் அண்ட் மில்க் ஷேக்ஸ் - 30 என்ற இலவச இணைப்பில் இடம் பெற்றிருந்த புதுமையான சமையல் குறிப்புகள் யாவும் அபாரம். - கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.
‘வெயிலோடு உறவாடி’ சம்மர் ஸ்பெஷல் சித்திரங்கள் கோடை கத்திரி வெயிலில் உள்ளத்தை குளிர்வித்தது. ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாதவை அறிவுரைகள் மிக மிக அருமை. - சு.இலக்குமணசுவாமி, மதுரை-6.
எழுத்தாளர் ரமணிச்சந்திரனின் நேர்காணல் அவரது தொடர்கதைகளைப் போலவே விறுவிறுப்புடன் இருந்தது. சம்மர் ஸ்பெஷல் ‘லோகோ’ சூப்பர். பா.ஜீவசுந்தரி தேடிப் பிடிக்கும் செல்லுலாய்ட் பெண்கள் ஒவ்வொருவரும் கனகச்சிதம். - சுகந்தி நாராயண், வியாசர் நகர்.
‘இனி எல்லாம் சுகமே’, ‘இமான் அஹமத்’ மிகவும் சிந்திக்க வைத்தார். நலமாக அவர் வாழ வேண்டும். ஆஸ்திரேலியாவில் பச்சிளங் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுப்பது மிகுந்த வியப்பைத் தந்தது. ‘தோழி சாய்ஸ்’ குழந்தையாய் குதூகலிக்கச் செய்தது. - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
‘நாவல் உலகின் ஒளவை’ ரமணிச்சந்திரன் பேட்டி யதார்த்தம். கம்பீர நடிகையாய் வலம் வந்து வெற்றிக் கொடி நாட்டிய மாதுரி தேவி பற்றிய கட்டுரை பிரமிக்க வைத்துவிட்டது. - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
‘சிறைச்சாலையில் சித்திரவதை’ என்ற கட்டுரை மனதை மிகவும் பாதித்து விட்டது. - திருமதி சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.
குவில்லிங் ஹேர் கிளிப்புகள் செய்முறை எளிமை. ரிச் லுக் கூட. மாதுரி தேவியின் நினைவுகளாக உலவும் தென்றலாக மனதை ‘வாராய்...’ என்று அழைத்துச் சென்றது. - வரலக்ஷ்மி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.
‘வெயிலோடு உறவாடி’(ய) புகைப்படங்கள் எங்களை பிரமிக்க வைத்தன. - வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.
‘வீடு தேடி வரும் ஹெல்த் ட்ரிங்ஸ்’ வரப்பிரசாதம்தான் - மயிலை கோபி, அசோக் நகர்.
|