அதுக்கு இதுதான் பேரு!



* Dormivegila
தூக்கமும் இல்லாம விழிப்பும் இல்லாம ரெண்டுக்கும் இடைப்பட்ட ஒரு மயக்க நிலை இருக்குமில்லையா? அதுக்குப் பேருதான் Dormivegila. வீட்டுல குட்டிக் குழந்தைகள் இருந்துச்சுன்னா இந்த விஷயம் உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்!



* Videnda
நேரில் பார்த்தால்தான் சில விஷயங்கள் நல்லா புரியும்... உணர முடியும். அப்படிப் பட்ட இடத்தையோ, மனிதர்களையோ குறிக்கும் பேருதான் Videnda.

* Myrmidon
எல்லா பெரிய மனுஷங்களுக்கும் ஒரு பர்சனல் அசிஸ்டென்ட் இருப்பதை பார்த்திருப்போம். அதுவும் முக்கியமா பொது வாழ்கையில் இருக்கும் செல்வாக்குமிக்க ஆளுக்கு கேள்வியே கேக்காம எது சொன்னாலும் தட்டாம வேலை செய்யும் ஒரு அடிமை இருக்கும். அப்படிப்பட்ட நல்ல தொண்டரடிப்பொடிக்குப் பேருதான் Myrmidon!

* Tirade
நாட்டுல தேர்தல் நேரத்தில் அரசியல் கூட்டம் நடக்கும் போது பார்த்திருப்போம், சில பேச்சாளர்கள் மேடையேறி அனல்பறக்கும் விதமா பேசுவாங்க... முடிவே இல்லாம ஒருத்தர் அடுத்தவரை பற்றி ரொம்ப குறை பாடி நீண்ட குற்ற பத்திரிகை வாசிக்கிற மேடை பேச்சுக்கு பேருதான் Tirade.

* Qualtagh
நம்மூரில் வீட்டை விட்டு வெளிய கிளம்பும் போது சிலர் யாரவது நல்ல ராசியான மனுஷங்க எதிரில் வரணும்னு சகுனம் பார்க்கிறதை பார்த்திருப்போம். மேலைநாடுகளில் புது வருஷம் பிறக்கும் போது இப்படி நம்மூரு மாதிரியே சகுனம் பார்ப்பாங்களாம். அப்படி நியூ years eve எனப்படும் நாளில் ஒருத்தர் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது எதிரில் பார்க்கும் முதல் நபருக்கு பேருதான் Qualtagh.



* Dysania
என்னதான் நல்லா தூங்கினாலும் சிலரால காலையில் மெத்தைய விட்டு எழுந்திரிக்கவே முடியாது. அப்படி தூக்கத்தில் இருந்து கண்முழிக்க கஷ்டப்படுற ஆசாமி எழுந்திரிக்கவே முடியாத நிலையில் இருப்பதற்குப் பேருதான் Dysania.

* Querecia
உலகமே சுத்தினாலும் கடைசியில சொந்த வீட்டுக்குள்ளே நுழையும்போது கிடைக்குமே ஒரு நிம்மதி, சந்தோஷம்... அதுக்கு ஈடு இணை இல்லை. இந்த மாதிரி எங்க நாம் ரொம்ப உரிமையோட சுதந்திரமா இருக்கிறோமோ அந்த இடத்துக்கு பேருதான் Querecia. நாம குடியிருக்கும் வீடுதான் நமக்கெல்லாம் Querecia.

* Oblation
தீபாவளி, பொங்கல் மாதிரி நல்ல நாள் வரும் போது நமக்குப் பிடிச்ச எல்லா பலகாரமும் செஞ்சிட்டு அதை சாப்பிடும் முன்னாடி ஒரு சம்பிரதாயமா கடவுள் முன்னாடி படைப்போம் இல்லையா? கடவுளுக்கு படைக்கும் இந்த சம்பிரதாயம் பேருதான் Oblation.