ட்விட்டர் ஸ்பெஷல்



வெயில்

* நல்லதொரு கோடையில் கடலிலிருந்து கிடைத்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே அமிர்தமென வழங்கப்பட்டிருக்கும்.
* சென்னையில்... மொட்டைமாடிக்கு நேர்கீழ் வீட்டுக் கிச்சனில் நின்று தோசை ஊற்ற முன்ஜென்மத்தில் பெரும்பாவம் செய்திருக்க வேண்டும்:-/



* ரோட்ல நடந்து போய்ட்டு இருக்கும்போதே ஜனங்க குபீர்னு பத்தி எரியற நாள் ரொம்ப தூரத்தில இல்லை:-( #வெயில்
* மொட்டை மாடியிலிருந்து அள்ளி வந்த துணிகள் மொத்தமும் வெயிலின் வாசம்.
* ‘என் அளவு பிரச்னை யாருக்குமே இல்லை’ என்பதுதான் எல்லோருடைய பிரச்னையும்.
* குடும்பத்தினரிடம் வெளிக்காட்டவியலா குடும்பத்தலைவரின் கோபங்கள் கஸ்டமர் கேருக்கு கால் செய்து தீர்த்துக்கொள்ளப்படுகின்றன.
* எரிச்சலூட்டும் பேச்சுக்கான சரியான பதிலடி என்பது குறைந்தபட்சம் ஒருமணி நேரம் கழித்தோ அதிகபட்சம் மூன்றுநாள் கழித்தோ புத்தியில் உதிக்கிறது.
* வீடு கிளம்பும்முன் கடைசியாக கோயில் படிகளில் அமர்கையில் கிடைக்கும் அசாதாரண நிம்மதியின் பெயர் கடவுள்.
* ஏமாற்றங்கள் பழகியிருந்தாலும் இனி எதையும் மாத்தமுடியாதுன்னு தெரிஞ்சிருந்தாலும் கோபமாவோ சோகமாவோ புலம்பிட்றது ஒரு  நமக்கு நாமே ஆறுதல்.
* வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை மட்டும் போக நேர்கிற சொந்த ஊரில் முதலில் வியக்க வைப்பது சட்டென வளர்ந்து நிற்கும் அக்கம்
பக்கத்து குழந்தைகள்.
* மரணம் எப்படி நிகழவேண்டுமென்றால் ரோலர்கோஸ்டரில் ஏறும் போது இருக்கும் ஜிவ் என்ற உணர்வும் இறங்கும் போது உணரும் நிசப்தமுமாகச் சிரித்துக்கொண்டே!
* ஆஃப் ஆயிருக்கற அடுப்பை அப்பப்ப எட்டிப்பாத்து ஆஃப் ஆயிருக்கான்னு செக் பண்றது அம்மாக்களோட
பொழுதுபோக்கு :-/
* உருளைக்கிழங்கு பொரியல் தந்துட்டா எந்த கேவலமான சாப்பாடும் இறங்கிடும்னு அம்மாக்கள் உறுதியா நம்பறாங்க:-/
* ஒரேயொரு ஏலக்காய் இஞ்சித்துண்டு தட்டிப்போட்ட ஒரேயொரு குவளை தேநீருக்கு மூன்று ராஜா பாட்டளவிலான பாத்திரம் தேய்க்க வேண்டியதாகி விட்டது:-/
* கஷ்டம் தெரிஞ்சு வளர்க்க முடிவெடுத்தா பிள்ளைங்க கஷ்டப்படுது. கஷ்டம் தெரியாம வளர்க்க ஆசைப்பட்டா பெற்றோர் கஷ்டப்படறாங்க #மிடில்கிளாஸ்
* சொந்த ஊரில் பழைய வீட்டில் மர பீரோவை சுத்தம் செய்கையில் கிடைக்கும் கண்ணாடி சட்டமிட்ட புகைப்படங்களின் பேர்தான் பொக்கிஷம்.
* கடிகாரத்தில் உள்ளது உள்ளபடி நேரம் சொல்லி தம் பிள்ளைகளை எழுப்பும் அம்மாக்கள் எவரேனும் இப்புவியில் உளரா?

சொரூபா
(கிறுக்கி - பெயரும் வினையும்)
@i_Soruba
சென்னை, சேலம்.