ப்ரியங்களுடன்



சிவசங்கரியின் ஒவ்வொரு பதிலும் அனுபவ முத்திரை! உறவோ, நட்போ அப்படியே குறை, நிறைகளுடன் ஏற்பதே உசிதம் என்ற வரி ஒன்றே அட்சர லட்சம் பெறும்!


- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16., வரலஷ்மி முத்துசாமி, சென்னை-37., அ.பிரேமா, சென்னை-68., பிரேம் குமார், மும்பை-17 மற்றும் ப.மூர்த்தி, பெங்களூரு-97. துபாய் பொண்ணு கேத்தரின், ‘மெட்ராஸ்’ பொண்ணாக மனதில் இடம் பிடித்து விட்டார்!

- பி.வைஷு, சென்னை-68.
மலாலாவுக்குக் கிடைத்த உலோகத் துண்டுகளில் ஒன்று லட்சியத்தைப் பரிசோதித்தது. மற்றொன்று, லட்சியத்துக்குக் கிடைத்த வெற்றி.

- ஆர்.ஜே.சுஜாதா, சென்னை-12 மற்றும் கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு-43.
‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் புதுவரவாகி இருக்கும் உமாதேவியின் நேர்காணல் இனிமை.

- கு.உமாதேவி பலராமன், திருவண்ணாமலை-1.
பூப்புப் பருவத்தைக் கடப்பதற்கு சாலை செல்வம் சொன்ன கருத்து மகள்களைப் பெற்ற அம்மாக்கள் அவசியம் பின்பற்ற வேண்டியது.

- வத்சலா சதாசிவன், சென்னை-64.
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’... நாசுக்காக விளக்கிவிட்டார் டாக்டர் ராஷ்மி ரெட்டி.

- பி.கீதா, சென்னை-68.
‘உலகின் டாப் 10 பள்ளங்கள்’ - இயற்கை நமக்கு அளித்த அதிசயங்கள். 

- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை., மயிலை கோபி, சென்னை-83 மற்றும் சங்கீதா என் ஸ்ரீதர், பெங்களூரு-43.
‘காதலுக்கு வயது தடையில்லை. மனம் விட்டுப் பேசுவோம். உயிருள்ள வரை காதலுடன் வாழ்வோம்’ என்பதை அருமையாக விளக்கியிருந்தார் மருத்துவர் காமராஜ்.

- ஜே.தனலட்சுமி, சென்னை-12.
பூர்வீக குடிகளுக்காக சககவியா போராடியதையும் மூலிகைச் செடிகள் மூலம் பலருக்கு அவர் உதவியதையும் படித்த போது பிரமிப்பில் ஆழ்ந்தேன்.

- சுகந்தா ராம், சென்னை-59.
இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் தாய்மார்களுக்கான ஆர்.வைதேகியின் ‘ட்வின்ஸ்’ தொடர் அபார அனுபவம். சிசேரியன் வாழ்வோடு கலந்து விட்ட நிலையில் சுகப்பிரசவம் சாத்தியம் என்பதை இன்றைய தலைமுறைக்குப் புரிய வைத்துவிட்டீர்கள். ‘நீங்கதான் முதலாளியம்மா’ மூலம் பல பெண்கள் ‘முதலாளியம்மா’ ஆவார்கள் என்று நம்பலாம்
.
- பிரதிபா வள்ளியூர்., ஏ.பி.எஸ். ரவீந்திரன், நாகர்கோவில்.
தமிழ் கார்த்திகை மாதம் பிறக்கும் நேரத்தில் அட்டையிலும் ‘கார்த்திகாவா..?’ நல்ல டச்! காஸ்ட்லி அயிட்டங்கள் ஆனாலும் ஈஸி டெஸர்ட்ஸ் 30ம் ஸ்வீட்டோ ஸ்வீட். ராஷ்மி ரெட்டி, யாழினி, ஞான சவுந்தரி, சுபா சார்லஸ், ஜெயராணி, ஜெயஸ்ரீ கஜராஜ், சரவணன், அஞ்சனா, மோகன் என இத்தனை டாக்டர்களைத் தேடிப் பிடித்து, இப்படியொரு ‘டாக்டர்கள் சிறப்பிதழ்’ தருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அசத்திட்டீங்க!

- சுகந்தி நாராயணன், சென்னை-39.
மகப்பேறு மருத்துவத்தை, குழந்தை வளர்ப்பின் மகத்துவத்தை மூத்த மருத்துவர் ஞானசவுந்தரியின் நேர்காணல் சிறப்பாக உணர்த்தியது. 

- அ.யாழினி பர்வதம், சென்னை-78.
வாடகைத் தாய் என்பவள் வாடகை சைக்கிள் அல்ல... அவருக்கும் சராசரி பெண்ணைப் போல தாய்மை உணர்வும் தாயுள்ளமும் இருக்கும் என்பதை கீதா ஆராவமுதன் அருமையாக விளக்கி இருந்தார். சாய்னாவின் குரு பக்தியே அவரது அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை. சாத்தூர் காராச்சேவின் ருசி ரகசியம் அறிந்து மகிழ்ந்தோம்.

- வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்-6 (மின்னஞ்சலில்)...
சூஸன்-சந்தோஷ் தம்பதியை மனமாரப் பாராட்டலாம்.

- ரஜினி பாலா, சென்னை-91 (மின்னஞ்சலில்)...
ஃபேஸ்புக் ஒரு கூர்மையுள்ள கத்தி... நெருப்பு என்றும் சொல்லலாம். சரியாகப்
பயன்படுத்த வேண்டும்.
  
- அன்புகுமார், ஆம்பூர் (மின்னஞ்சலில்)...