எஸ்கேப்!



Twenty three skidoo

‘ஆளை விடுங்க சாமி... என் வேலை முடிஞ்சிருச்சு... நீங்க அடுத்து ஒரு வேலைய என் தலையில கட்றதுக்குள்ள இந்த இடத்தை விட்டு நான் கிளம்பறேன்...’ இதை நாசுக்கா சொல்லிட்டு நழுவி ஓடுறதுதான் இந்த Twenty three skidoவின் பொதுவான அர்த்தம். இதுக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு.   Old Morse code signalo   வழக்கப்படி தந்தி அனுப்பும் அலுவலர், ‘செய்தி இதோடு முடிந்தது’ என்பதைக் குறிக்க இந்த 23 என்ற எண்ணைப் பயன்படுத்துவாராம்.

 இன்றும் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் தலைமை எடிட்டருக்கு அனுப்பும் செய்தித் தொகுப்பின் முடிவில் இந்த எண்ணை, ‘இத்துடன் செய்தி முடிந்தது’ என்பதைக் குறிப்பால் உணர்த்த பயன்படுத்துகிறார்கள். அதாவது, ‘நீங்க கேட்ட வேலை (செய்தி சேகரிப்பு) முடிஞ்சுது... இதோடு நான் கிளம்பறேன்’ என்று குறிப்பால் உணர்த்தி விடுதல்!

பேச்சுவழக்கில் Skidoo என்பது பனியில் வேகமாகச் சறுக்கிக்கொண்டு செல்ல பயன்படும் ஸ்கூட்டர். பல James Bond படங்களில் கூட பார்த்திருப்போம் அதை. பனியில் வழுக்கிக்கொண்டு வேகமாகச் செல்ல இதைவிட வேறு வண்டி ஏதுமில்லை.மொத்தத்தில் இந்த ரெண்டு சொற் களையும் இணைத்தால் கிடைக்கும் பொருள், ‘நீங்க வந்த வேலை முடிஞ்சிருச்சுன்னா உடனே இங்கிருந்து கிளம்புங்க’ அல்லது ‘வேலை முடிஞ்சிருச்சுன்னா வேகமா நடையக் கட்டு சாமி’ என்பதன் ஆங்கில மொழியாக்கம்தான் இந்த Twenty three skidoo. ரைட்டு...   Now me   Twenty three skidoo!

கருப்புக் கால்களும் அடித்து நொறுக்குபவர்களும்!

  ‘blacklegs’ and ‘strikebreakers’

சம்பந்தமே இல்லாம இருக்குல்ல? எல்லாம் பழைய மாவுதான்... பலகாரம் மட்டும் புதுசு!வேலைநிறுத்தம் (Strike) பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். அதில் பங்குபெறும், பெறாத ஆட்களுக்கென்று தனிப் பெயர்களும் உண்டு. அதுதான் இந்த ‘blacklegs‘ and ‘strikebreakers‘. ஆங்கிலத்தில் ‘blacksheep’ என்பது, கூட இருந்தே குழிபறிக்கும் மனிதர்களைக் குறிக்கும் வார்த்தை.

 அதையே கொஞ்சம் மாற்றி  blacklegs என்று சொன்னால் அதே அர்த்த முடைய வேறு வார்த்தைதான் வரும். அதாவது, ஒரே தொழிற்சங்கத்தில் இருந்து கொண்டு வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாமல் இருக்கும் சில தொழிலாளர்களைத்தான் blacklegs  என்று அழைப்பர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாற்றாக முதலாளிகள் தற்காலிகமாக வேலைக்குச் சேர்க்கும் தினக்கூலிகள்தான் strikebreakers! இந்த வார்த்தையும் அமெரிக்காவில்தான் உருவானது. ஜப்பானில் இந்த முறை தடை செய்யப்பட்டு இருந்தாலும் அமெரிக்க முதலாளிகள்தான் இந்த Strikebreaking முறையை இன்றளவும் அதிகம் நடைமுறைப்
படுத்துபவர்கள்!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாற்றாக முதலாளிகள் தற்காலிகமாக வேலைக்குச் சேர்க்கும் தினக்கூலிகள்தான் strike breakers!