ப்ரியங்களுடன்...
*மண் வளம் அழிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நெகிழிக்கு மாற்றாக தென்னை ஓலையில் தட்டுக்கள், ஸ்ட்ராக்கள் தயாரிக்கின்ற மகத்தான பணியினை செவ்வனே செய்து வரும் ராதா மணிகண்டன் தம்பதியினருக்கு பாராட்டுகள். - அயன்புரம் த.சத்யநாராயணன், சென்னை.
*கருணைதேவியின் நல்ல மனமும், புத்திக்கூர்மையும், அயராத முயற்சியும், தொழில் நேர்த்தியும் இன்னும் அவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை - கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
*காடுகளில் வனவிலங்குகளை புகைப்படம் பிடிப்பது மிகவும் கடினமான பணி. அதை தன் பத்து வயதில் சாதித்திருக்கும் ஷ்ரேயாவுக்கு வாழ்த்துகள். - தா.சைமன் தேவா, விநாயகபுரம்.
*‘விளையாடினால் பக்கவாதம் குணமாகும்’... இதை படித்த போது ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. சிகிச்சை முறை சிலிர்க்க வைத்தன. மரத்தில் இருக்கும் பழத்தை பறிப்பது ஈசியான வேலை தான். அதையே அனைவரும் கடைபிடித்தால் நலமே! - பொன்னியம்மன்மேடு வண்ணை கணேசன், சென்னை.
*சிற்பக்கலையில் சாதிக்க நினைக்கும் துர்காவின் முயற்சிக்கு பாராட்டுகள். என்னைப் போல் ஒரு பொம்மை யோசிக்க வைத்த வித்தியாசமான பக்கம். - எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
*குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவ் பிரச்னைகளுக்கும் கவனச் சிதறல்கள் இல்லாமல் அமைதியாக பாடங்களை கவனிப்பதற்கும் செல்போன், டி.வி பார்ப்பதை தவிர்க்க யோகாசனம் கை கொடுக்கும் என்பதை படித்ததும் யோகாவின் முக்கியத்துவம் புரிந்தது. - டி.முருகேசன், கங்களாஞ்சேரி.
*சினிமாவில் தமிழில் பாட்டுப் பாடி தமிழுக்கு மரியாதை கொடுத்துள்ள, பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மைதிலி தாக்கூர் சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம். - ஜி.ராஜேஸ்வரி, சென்னை.
*பார்வையற்ற மகளிர் கிரிக்கெட் அணியினர் T20 உலகக் கோப்பையை வென்று உலக மக்களின் பார்வையை திரும்ப வைத்துள்ளனர். வெற்றி பெற்ற மகளிர் அணிக்கு பாராட்டுகள். - எஸ்.பிரீத்தி, செங்கல்பட்டு.
அட்டைப்படம்: ஸ்வேதா டோரதி, புகைப்படம்: கேமரா செந்தில்,
|