ப்ரியங்களுடன்...
 * குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால் மட்டும் போதாது... அவர்களிடம் நிறைய பேசுங்கள் என்று கூறியது அருமை. படிக்க மட்டும் கற்றுக் கொடுக்காமல் சுகாதாரம், ஆரோக்கியம், சுறுசுறுப்பு பற்றி கற்றுக் கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு. - பொன்னியம்மன்மேடு வண்ணை கணேசன், சென்னை.
*தகிக்கும் வெயிலை தணித்திடும் தண்ணீர் சத்து நிரம்பிய தர்பூசணியின் சிறப்புகளை விவரித்த இயற்கை கட்டுரையை படித்ததும், தட்டு நிறைய தர்பூசணித் துண்டுகளை சுவைத்த மகிழ்வை அளித்துவிட்டது. - அயன்புரம் சத்தியநாராயணன், சென்னை.
*தேஜாஸ் டிடெக்டிவ் நிறுவனத்தினை அதுவும் தலைநகர் தில்லியில் நடத்தி வரும் சகோதரி பாவனாவை எப்படி பாராட்டினாலும் தகும். பெண்களால் எத்துறையிலும் ஜெயிக்க முடியும் என்பதை வெளியுலகிற்கு உணர்த்தி இருக்கிறார். - கலைச்செல்வி, கரூர்.
*மலைவாழ் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும் என முனைப்புடன் செயல்படும் தோழி ‘கண்மணி’யின் பணிகள் ெதாடரட்டும். - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
*டாக்டர்களும் இல்லத்தரசிகளுக்கான அழகியல் பயிற்சி பயனுள்ள முயற்சி. அழகியல் சிகிச்சை நிபுணர் கன்னியம்மாளின் சேவை காலத்தின் கட்டாயம். - கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
*நேரத்தை வீணாக்காமல் உழைத்தால் நிச்சயம் சக்சஸ்தான் என்று கூறிய அர்ச்சனா உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட வேண்டியவர் தான். உழைப்பு இல்லை என்றால் செழிப்பு இல்லை என்பதை தனது திறமையால் நிரூபித்துக்காட்டிய இவருக்கு பாராட்டுகள். - கா.சித்ரா காமராஜ், கோவை.
*தன்னுடைய குழந்தைக்காக தள்ளுவண்டி உணவுக் கடையை நடத்தும் திவ்யா பாரதி உண்மையியே புதுமை பெண்தான். மக்களுக்கு ஆரோக்கியமான உணவினை அளித்து சிறப்பு பெற்றுள்ளார். - எஸ்.ஏ.ஆஞ்சலின், சென்னை.
அட்டைப்படம்: கேத்தரின் வருணா புகைப்படம்: கேமரா செந்தில்
|