அன்பு பாலம்



மெக்சிகோ- அமெரிக்காவுக்கு இடையேயான தடுப்பு வேலியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இருநாடுகளின் எல்லைகளை அந்த வேலி பிரிக்கிறது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் டிரம்ப் விடாப்பிடியாக ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்குத்தான்’ என்றிருக்கிறார். இந்நிலையில் அமெரிக்க குழந்தைகளும் மெக் சிகோ குழந்தைகளும் சேர்ந்து விளையாடுவதற்காக seesaw-க்களை வடிவமைத்திருக்கிறார் ரொனால்டு ரேல் எனும் கட்டிட வடிவமைப்பாளர். தடுப்பு வேலிக்குள் புகுந்து  இரு நாட்டினைரையும் இணைக்கும் அன்புப் பாலமாக மிளிர் கிறது அந்த seesaw.