சுழலும் பாலம்கட்டடக்கலையின் அதிசயம் இந்த சுழலும் பாலம். 263 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தின் எடை 46 ஆயிரம் டன். 52 டிகிரி கோணத்தில் இந்தப் பாலம் சுழல்கிறது. எடை மற்றும் சுழலும் திறன் காரணமாக  உலகசாதனை படைத்துவிட்டது.

இந்தப் பாலம் அமைந்திருப்பது வடக்கு சீனாவில். பாலத்தை சுழலச்  செய்வதற்காக கோள வடிவில் ஒரு கருவியை வைத்திருக்கிறார்கள். அதன் விட்டம் 6.5 மீட்டர். பெய்ஜிங்- குவாங்சூவுக்கு இடையிலான ரயில்வே டிராபிக்கை குறைப்பதற்காக இந்தப் பாலத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.