வைரல் சம்பவம்தென்கொரியாவின் தலைநகர் சியோலில் போரம் கீ வாங்கிய ஐந்து அடுக்குமாடி வீடு தான் இப்போது ஹாட் டாக். இந்த வீட்டின் இந்திய மதிப்பு சுமார் 55 கோடி ரூபாய். இதிலென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? போரம் கீயின் வயது 6 தான்.
இந்தச் சிறுமி ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் அவளுக்கு விருப்பமான பொம்மைகளைப் பற்றி பேசுவாள். ஒவ்வொரு வீடியோவும் மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு வைரலாகிவிடும். இப்போது அவளின் சேனலுக்கு 3 கோடி சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.