மக்களைக் காப்பாற்றும் விஞ்ஞானிகள்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் வியந்து பார்க்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் சயின்ஸ் ஃபிக் ஷன் வகைமையைச் சார்ந்ததாகவே உள்ளன. மொழி, நாடு, கலாச்சாரத்தைத் தாண்டி சயின்ஸ் ஃபிக் ஷன் திரைப்படங்கள் நம்மை ஈர்க்கின்றன. நாம் அறியாத ஓர் உலகத்தை அந்தப் படங்கள் திறந்து காட்டுவது இதற்கு ஒரு காரணம்.

அதனால் சயின்ஸ் ஃபிக் ஷன் திரைப்படங்களுக்கு உலகெங்கும் தனி மவுசு.ஆனால், சயின்ஸ் ஃபிக் ஷன் திரைப்படங்கள் என்றாலே அது ஹாலிவுட் தான் என்ற ஒரு மாயை  உண்டு. பில்லியன் கணக்கில் பட்ஜெட், நவீன தொழில்நுட்பம், உலகளாவிய சந்தைப் படுத்துதல் என பல அம்சங்கள் ஹாலிவுட்டில் நிறைந்திருப்ப தால் சயின்ஸ் ஃபிக் ஷன் வகைமைத் திரைப்படங்கள் அங்கிருந்து மட்டுமே வெளிவந்தன.

அத்துடன் வசூலையும் அள்ளிக்குவித்தன. மற்ற நாடுகளிலிருந்து அவ்வப்போது சயின்ஸ் ஃபிக் ஷன் படங்கள் வெளியானாலும் அவை அவ்வளவாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. சமீபத்தில் இதையெல்லாம் அடித்து உடைத்து வரலாறு படைத்திருக் கிறது சீனா.

ஆம்; ‘The Wandering Earth’ என்ற சீன சயின்ஸ் ஃபிக் ஷன் திரைப்படம் 50 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயா ராகி சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதாவது 350 கோடி ரூபாய் பட்ஜெட். சூரியன் அழிந்த பிறகு பூமியில் உள்ள மக்களைக் காப்பாற்ற விஞ்ஞானிகள் எடுக்கும் முயற்சிகள்தான் இத்திரைப் படத்தின்  ஒன்லைன்.  சீனாவின் முதல் முழுநீள சயின்ஸ் ஃபிக் ஷன் படமும் இதுவே.

மட்டுமல்ல, ஒரே வாரத்தில் 298 மில்லியன்  டாலர்  வசூலைக் குவித்த சீனப் படமும் இதுவே. இப்போது இதன் வசூல் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய். நெட்பிலிக்ஸில் இந்தப் படத்தை பார்க்க முடியும். இந்தப் படத்தின் ரிசல்ட்டைப் பார்த்து ஹாலிவுட்டே ஆடிப்போயிருக்கிறது.