பாப்-அப் செல்ஃபி கேமரா போன்



தினம் தினம் புதுப்புது மாடல் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் இறங்கிகபளீகரம் செய்து வருகின்றன. ஆனால், இந்த வருடத்தில் ‘ஹூவாய்’ நிறுவனத்திலிருந்து எந்த மாடலும் பெரிதாக வெளியாகவில்லை.
இது வாடிக்கையாளர்களைக் கவலைக்குள்ளாக்கியது. காரணம், உலகில் அதிகமாக விரும்பக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பாராட்டை தன் வசமாக வைத்திருப்பது ‘ஹூவாய்’ தான். தவிர, மிகச் சிறந்த கேமரா வசதி கொண்ட போனும் ‘ஹூவாய்’ தான். இந்நிலையில் இந்தியாவில் ‘Y9 பிரைம்’ என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

நவீன டேப்லெட்டுகளுக்குப் போட்டியாக 6.59 இன்ச்சில் மெகா டிஸ்பிளே, அதுவும் ஃபுல் ஹெச்.டி மற்றும் எல்.சி.டி ஃபுல் வியூவுடன், போனின் சீரான செயல்பாடுகளுக்கு ‘HiSilicon Kirin 710’ பிராசஸர், 16 எம்பியில் செல்ஃபி கேமரா, பாப்-அப் வசதியுடன் இருப்பதால் இது செல்ஃபியை இன்னும் சிறப்பாக மாற்றுகிறது.

1080x2340 பிக்ஸல் ரெசல்யூசன், 4 ஜிபி ரேம், 128 ஜிபி  ஸ்டோரேஜ், எஸ்டி கார்டு மூலம் 512 ஜிபி வரை ஸ்டோரேஜை நீட்டித்துக்கொள்ளும் வசதி,  ஒரு நாள் முழுக்க சார்ஜ் நிற்க 4,000mAh பேட்டரி திறன், 16 எம்பியில் பிரைமரி சென்சார் கேமரா, 8 எம்பியில் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸுடன் கூடிய கேமரா, 2 எம்பியில் டெரிட்டரி சென்சாருடன் இன்னொரு கேமரா என மூன்று பின்புற கேமராக்கள், ஃபிங்கர் பிரின்ட் மூலம் அன்லாக் செய்யும் வசதி என அசத்துகிறது இந்த புது மாடல். மரகதப் பச்சையிலும், நீல வண்ணத்திலும் இந்த போன் கிடைக்கிறது. ஆகஸ்ட் 7 முதல் ஆன்லைன் மற்றும் ஷோரூம்களில் கிடைக்கும் இதன் விலை ரூ. 15,990.