உலகம் சுற்றும் வாலிபன்எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாமல் கடல் மார்க்கமாக உலகம் சுற்றும் போட்டி ஒன்று கடந்த ஜூலையில் தொடங்கியது. பிரான்ஸில் ஆரம்பித்த இப்போட்டியில் 19 பேர் கலந்துகொண்டனர். 212 நாட்களில் முதல் ஆளாக உலகைச் சுற்றி வந்து சாதனை புரிந்திருக்கிறார் ஜீன் லுக் வேன். பிரான்ஸைச் சேர்ந்த ஜீன் இந்தப் பயணத்துக்காக ஒரு சிறிய படகைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்.

சுமார் 30,000 கிலோமீட்டர் தூரம் கடலில் பயணித்திருக்கும் ஜீனின் வயது 73.நவம்பரில் இவர் சென்ற படகு பிரச்னைக்கு உள்ளாக, கரையொதுங்கிய ஜீனுக்கு இலவசமாகவே படகை சரிசெய்து தந்துள்ளார் ஒருவர். இந்தப் பயணத்தில் கிடைத்த அருமையான சந்திப்பு அதுவென்று ஜீன் நினைவு கூர்கிறார்.உலகைச் சுற்றி வந்த ஜீன் தனது படகை ஏலம் விடப் போகிறார். கிடைக்கும் பணத்தை வைத்து படகு ஓட்டும் பயிற்சி அளிக்கப்போகிறார்.