ஏன் தூங்க வேண்டும்?ஏன்? எதற்கு? எப்படி?

‘தூக்கம் ரொம்பவே முக்கி யம்’- இதை பலமுறை கேட்டிருப்போம். ஆனால், இரவில் சரியாகத் தூங்காமல் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடப்போம். காரணம் கேட்டால் ‘தூக்கம் வரவில்லை’ என்பது எல்லோருடைய பதிலாக இருக்கும். எந்த காரணமும் சொல்லாமல் ஸ்மார்ட்போனை ஆஃப் செய்து விட்டு தூங்குங்கள் என்கிறது மருத்துவம்.  ‘‘இரவில் நன்றாக உறங்கினால் பகலில் நன்றாக வாகனத்தை ஓட்ட முடியும்.

சாலை விபத்துக்குள்ளானவர்களில் 90% பேர் சரியாக  தூங்காதவர்கள்...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு. அடுத்து, தூங்கும்போது உங்களின் உடலில் உள்ள கலோரிகள் எரிந்து உடல் ஆரோக்கியமாகும். கவனத் திறனை அதிகரிக்கிறது.

தூக்கம் ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாறுகிறது. உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கிறது. பகலில் பார்க்கும் எந்த வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியும். இன்னும் நிறைய நன்மைகள்
தூக்கத்தில் இருக்கிறது.