பழங்களின் ராஜாகரடு முரடான தோற்றம், கிட்டப் போனாலே மூச்சை அடைக்கும் சாக்கடை நாற்றம், கையில் பிடிக்க முடியாத அளவுக்கு பெரிய சைஸ்... இப்படி எல்லா வகையிலும் எதிர்மறையான குணாதிசயங்களைக் கொண்டது டுரியான் பழம். தென்கிழக்கு ஆசியாவில் பிரபலமான இந்தப் பழம், ‘பழங்களின் ராஜா’, ‘உலகில் அதிக நாற்றமெடுக்கும் பழம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்தோனேஷியாவில் கடந்த வாரம் ஒரு பழம் மட்டுமே 72,000 ரூபாய்க்கு விலை போயிருக்கிறது. வாங்கியவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டாம் என்று பழக்கடையின் முதலாளியிடம் வேண்டுகோளை வைத்துள்ளனர்.

மருத்துவ குணம் மிக்க இப்பழம் பிரவச காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அத்துடன் இந்தோனேஷியாவில் பல திருவிழாக்களில் டுரியான் முக்கிய இடத்தை வகிக்கிறது.‘‘இருந்தாலும் ஒரு பழத்துக்கு 72,000 ரூபாய் ரொம்பவே அதிகம்...’’ என்று சாடுகின்றனர் சமூக வலைத்தளபோராளிகள்.