நியூஸ் பிட்ஸ்*வரலாறு காணாத குளிரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. கடந்த வாரத்தில் ஒரு நாள் அண்டார்க்டிகாவை விட சிகாகோவில் குளிர் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதுவரைக்கும் அங்கே குளிரால் 8 பேர் இறந்துள்ளனர்.

*தொழில்நுட்ப ரகசியங்களை சீனாவிற்கு விற்றதாக ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
*பிரேசில் அணை உடைந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டவர்
களைக் காணவில்லை.

*ஃபேஸ்புக்கில் உள்ள உறுப்பினர்களில் பாதிப்பேருடைய கணக்கு போலியானது என்கிறது சமீபத்திய ஆய்வு.

*இந்தியாவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.