இரும்பை முந்தும் பேனா!



அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க ஸ்டீல் அலுமினிய இறக்குமதிக்கு பெருமளவு வரிவிதித்து உலக நாடுகளுடன் மோதல் போக்கை வளர்த்து வருகிறார். ஆனால் அதைவிட அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் பத்திரிகைத்துறையை போலிச்செய்திகள் என உதவிகளை அளிக்காமல் புறக்கணித்து ஒதுக்கி வருகிறார்.

2001 ஆம் ஆண்டு பத்திரிகைத்துறையில் கிடைத்த வேலைவாய்ப்பு களின் எண்ணிக்கை 2,40,000. ஆனால் இதே காலகட்டத்தில் ஸ்டீல் துறையில் உருவான வேலைவாய்ப்புகள் 44 ஆயிரம்தான். பியூ ஆராய்ச்சி மையம் செய்த ஆய்வில் (ஜூலை 30) 2008-2017 காலகட்டத்தில் 23 சதவிகித வேலைவாய்ப்புகள் சரிந்துள்ளன எனத் தெரியவந்துள்ளது. 2001-2016 காலத்தில் பணியிடங்களின் எண்ணிக்கை 4,12,000 -1,74,000 ஆகக் குறைந்துவிட்டது என  தொழிலாளர் புள்ளிவிவரப் பிரிவு(BLS) அறிக்கை தகவல் கூறுகிறது.

சீனாவின் இறக்குமதியை அமெரிக்கா நாடக் காரணமே ஸ்டீல் துறையில் பெரியளவு லாபத்தை அமெரிக்க நிறுவனங்கள் பெற முடியாததுதான். 23 ஆயிரத்து 400 வேலைகளை வரிவிதிப்பு மூலம் ட்ரம்ப் உருவாக்கினால் பிற துறைகளில் வேலைவாய்ப்பு இழப்பு 4 லட்சம் வரை இருக்கும்.