வண்ணம் தீட்டுவோம்!



நவீன குழந்தைகளின் வண்ணப்பட நூல்களின் தொடக்கம் 1846 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஓவியரான கேட் க்ரீன்வே தொடங்கியதுதான். பின்னர் ஜெர்மனியைச் சேர்ந்த ஜான்வெய்க் அண்ட் கோ நிறுவனத்தின் பதிப்பாக 1858 ஆம் ஆண்டு வெளியானது.
1870 ஆம் ஆண்டு வெளியான ‘Little Folks’ இதழில் வண்ணம் தீட்டும் போட்டிகளுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் குழந்தைகள் மருத்துவ மனைக்கும் இவ்விதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அமெரிக்க பதிப்பாளரான மெக்லாக்லின் சகோதரர்கள் இங்கிலாந்து கலைஞரான க்ரீன்வேயின் படங்களை அவரது அனுமதி கோராமலே எடுத்து பதிப்பித்து அதனை புகழ்பெற்ற படைப்புகளாக மாற்றினர்.

பத்தொன்பது மற்றும் இருபதாவது நூற்றாண்டில் சீர்திருத்தப் பாதையில் பயணித்த குழந்தைகளின் கல்விப்பணியில் வண்ணப்பட நூல்கள் வரலாறு, அறிவியல், ஆளுமைகள் என பலரையும் குழந்தைகளிடம் எளிதாக அறி முகம் செய்ய உதவின.