நாகரிகத்தின் தடம்!



Bhirrana, Mehrgarh
இரண்டு மில்லியன் ச.கி.மீ ஹரப்பா நாகரிகம் பரவியிருந்த பரப்பு இது. தொன்மையான 2 ஆயிரம் இடங்களில் பிராணா, மெஹ்கார் ஸ்பெஷலானவை. இங்கு கற்காலம் தொடங்கி, சிந்துவெளி நாகரிகம் வரையிலான பரிணாம வளர்ச்சி பற்றிய குறிப்புகள் கிடைத்தன.

Mohenjodaro (3000-1900BC)
1920க்குப் பிறகு கண்டறியப்பட்ட சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய கலாசார இடம். சிந்து, பாகிஸ்தான் உள்ளடங்கிய 250 ஹெக்டேர்களை யுனெஸ்கோ 1980ஆம் ஆண்டில் தொன்மையான இடமாக அறிவித்துள்ளது.

ஹரப்பா (2800-1300BC)
ரவி ஆற்றுப்பகுதி அருகேயுள்ள கிராமத்தின் பெயர் 150 ஏக்கரில் பரந்து விரிந்த சிந்துவெளி நாகரிகத்திற்கு சூட்டப்பட்டது. ஆங்கிலேயரின் ஆட்சியின்போது  இவ்விடம் பெருமளவு சிதைவுக்குள்ளானது.
 
Rakhigarhi (5500-1900 BC)
டெல்லியிலிருந்து 156 கி.மீ தொலைவில் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ள சிந்துவெளி நாகரிகம்  பரவியிருந்த  தொன்மை இடம் இது. கி.மு 5500 ஆண்டு தொன்மையான இந்த இடம் காஹார் ஆற்றிலிருந்து 27 கி.மீ தொலைவில் அமைந் துள்ளது.