வெள்ளைநிறம் எதற்கு?



மிதவெப்ப நாடான இந்தியாவில் பெரும்பாலான கார்களுக்கு வெள்ளை நிறமே முதல் தேர்வாக இருக்கும். என்ன காரணம் என சித்திருக்கிறீர்களா? கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள் என ஒருவரின் விருப்பத்தேர்வையும் தாண்டி வெள்ளை நிறம் வெற்றிபெற அறிவியல் காரணம் சூரியனின் வெப்பம்தான்.

கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு உள்ள வெப்பவிதிகள்அப்படியே விமானத்திற்கும் பொருந்தும். பிற நிறங்களைவிடவெள்ளை நிறத்தை பயன்படுத்தினால் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு சுற்று குறையும்.

விமானத்தின்அலுமினிய உடல் சூரியனால் ஏகத்துக்கும் சூடாவதால் அதனைக் குறைக்க பெரும்பாலும் வெள்ளைநிற பெயிண்டை தேர்ந்தெடுக்கின்றனர். அதிக உயரத்தில் பயணிக்கும்போது சூரிய வெப்பத்திலிருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்களின் அளவையும் பெருமளவு வெள்ளைநிறம் தடுக்கிறது.