ஆய்வகத்தில் நுரையீரல்!



உலகெங்கும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைக்குத் தேவைப்படும் நுரையீரல்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அமெரிக்காவில் மட்டும் 1,400 பேர்   தங்கள் பெயரைப் பதிவு செய்துவிட்டு நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு காத்திருக்கின்றனர். டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு மூலம் இனி ஆய் வகங்களிலேயே நுரையீரல் களைத் தயாரிக்கும் வசதி ஏற் படப்போகிறது.

பன்றியின் செல்களின் மூலம் உருவாக்கிய நுரை யீரல்  உறுப்பை வெற்றிகரமாக பன்றியின் உடலில் பொருத்தி வெற்றிபெற்றுள்ளனர். ஆய்வகத்தில் முப்பது நாட்கள் கவனமாக வளர்க்கப்பட்ட நுரை யீரல், பன்றியின் உடலில் பொருத்தப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி பிரச்னையின்றி செயல்படுவது புதிய நம்பிக்கையளித்துள்ளது.

நுரையீரலை நெடுநாட்கள் கவனித்து ஆராய ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத் துள்ளனர். இதன் மூலம் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் தட்டுப்பாட்டை குறைப்பதன் மூலம் ஆய்வகத்தில் இதனை தயாரித்து உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளுக்கான பட்டியல் நீளத்தையும் குறைக்கலாம்.