சென்னை சீக்ரெட்ஸ்



ரிப்பன் பில்டிங்!

1904ம் ஆண்டு. நகராட்சி மற் றொரு திருப்பத்தைச் சந்தித்தது. பணியிலிருந்த 32 நகராட்சி ஆணையர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 1909 ஆம் ஆண்டு முத்தியால்பேட்டையிலுள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

நியோ கிளாசிக்கல் பாணியில் ஜி.எஸ்.டி ஹாரிஸ் என்ற கட்டடக்கலை நிபுணர் வடி வமைக்க லோகநாத முதலியார் கட்டினார். வெள்ளை நிறத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இக்கட்டிடம் கட்ட அன்று ஏழரை லட்சம் ரூபாய் செலவானது. பிறகு, நான்காண்டுகள் கழித்து 1913 ஆம் ஆண்டு திறப்பு விழா கண்டது. அதுவே பூந்தமல்லி சாலையில் சென்ட்ரல் அருகே கம்பீரமாக நிற்கும் இன்றைய ரிப்பன் பில்டிங் கட்டிடம்.

யார் இந்த ரிப்பன்?

ஜார்ஜ் ஃபிரடெரிக் சாமுவேல் ராபின்சன் (எ) ரிப்பன் பிரபு 1880 முதல் 1884 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனர லாக இருந்தவர். அன்று ஐரோப்பியர் சம்பந்தமான வழக்கை ஐரோப்பிய நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும். இந்நிலையில் வைஸ்ராய் கவுன்சிலில் சட்ட உறுப்பினராக இருந்த சர் சி.பி இல்பர்ட் என்பவர் இப்பாகுபாட்டைப் போக்க ஒரு மசோதா கொண்டு வந்தார்.

இதற்கு ஐரோப்பியர் களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், துணிச்சலாக அதைச் செயல்படுத்தி மசோதாவில் திருத்தம் கொண்டு வந்தார் ரிப்பன். பிறகு, உள்ளாட்சியில் பல் வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததால் ‘உள்ளாட்சியின் தந்தை’ என்றும் போற்றப்பட்டார். இருந்தும் மசோதா சர்ச்சை, விமர்சனங்களால் மனமுடைந்த ரிப்பன் பதவியை விட்டு விலகி இங்கிலாந்திற்கே திரும்பினார்.

இந்தியர்களின் பிரச்னைகளை கனிவுடன் கேட்டதால் அவரை இந்தியர்கள், ‘ரிப்பன் எங்கள் அப்பன்’ எனப் புகழ்ந்தனர். இவர் நகராட்சி அலுவலகம் கட்டத் தொடங்கிய அதே ஆண்டில் இறந்து போனார். அதனால், அவரது நினைவாக இந்தக் கட்டி டத்திற்கு ரிப்பன் எனப் பெயர் சூட்டப்பட்டது.

பிகே