சூப்பர் மனிதன்!
எலும்பு வலிமை

எக்ஸ்மேன் படத்தில் ஹ்யூ ஜாக் மனின் காயம் விரைவில் ஆறும் ஆற்றலும், வலிமையும், மோப்ப சக்தியும் பார்வையாளர்களைக்  கவர்ந்தன.  இதில் எலும்புகளின் உறுதிக்கு LPR5 என்ற மரபணு காரணம்.

இதில் மாறுபாடு ஏற்படுத்தியபோது  கனெக்ட்டிகட்டைச் சேர்ந்த குடும்பத்தினரின் உடலில் எலும்புகள் அதிஉறுதியாயின. யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த  ஆராய்ச்சி  மூலம்  ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தீர்க்க முயற்சித்து வருகின்றனர்.
 
லேசர் பார்வை!  

ஒரு மில்லியன் நிறங்களை காண முடியும் மனிதன் நூறு மில்லியன் பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும்? இதற்கு ஆப்ஸின் மரபணு உதவுகிறது. ஆண்களுக்கு வண்ணங்களை அறியும் மூன்று உணர்விகளும் பெண்களுக்கு நான்கும் உள்ளன. இதில் மாற்றம் ஏற்படுத்தினால் நிறைய வண்ணங்களைக்காண முடியுமா என ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
 
ஓடு ராஜா ஓடு  

உசேன்  போல்ட்டாய்  மாறி  ஓட  அனைவருக்கும் ஆசைதான். முடியுமா?  ACTN 3 மரபணுவைத் தூண்டினால் நிச்சயம் சாத்தியம்.  2008 ஆம்  ஆண்டு  ஆராய்ச்சி இதனை உறுதிப்படுத்தியுள்ளது.