நோயறியும் மூக்கு!



பெருங்குடல்  தொடர்பான நோய்களை டெஸ்ட் செய்து  வெயிட்டிங் லிஸ்ட்டில்  உட்கார்ந்து  ரிசல்ட்களைப் பெற்று  பீதியாகியிருப்போம். ஆனால் இனிமேல் அதற்கு காத்திருக்க வேண்டியதில்லை. மூக்கு போதும். நோய் அறியலாம்.தற்போது  மூசி 32 எனும் செயற்கை  மூக்கை  ஸ்பெயினைச்சேர்ந்த வாலென்சியா பாலிடெக்னிக்  பல்கலைக்கழகமும்,  டாஃபே  எனும்  சுகாதார அமைப்பும் இணைந்து கண்டுபிடித்துள்ளன.

ஏறத்தாழ 440 சாம்பிள்களை வைத்து டெஸ்ட் செய்ததில் மூன்றே  நிமிடத்தில்  குடல்நோய்களை 90 சதவிகிதம் சரியாகச் சொல்லி சாதித்திருக்கிறது மூசி.பொது பயன்பாட்டுக்கு மூசி வரும் முன்பு, இதன் அல்காரிதத்தை பல்வேறு நோய்களைக்  கண்டுபிடிக்கும்படி மாற்றும் தேவையுள்ளது. பழத்தில்  நுண்ணுயிரிகள் கலப்படம்,  கனிந்த  பழங்கள் ஆகியவற்றைக் கண்டறியவும் எதிர்காலத்தில் மூக்கு அதாவது மூசி பயன்பட வாய்ப்புள்ளது.