மரபணுவை சிதைக்கும் மது!



ஆல்கஹால் குடிப்பது உடலின் ஸ்டெம்செல்களை தாக்கி மரபணுரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதோடு புற்றுநோயை உண்டாக்கும் காரணியாகவும் உள்ளது என்பதை கேம்பிரிட்ஜ் பல்கலையின் மூலக்கூறு உயிரியல் பிரிவு கண்டறிந்துள்ளது. இதுகுறித்து எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆல்கஹால் எலிகளின்  உடலில்  புற்றுநோய்க்கான தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது.

“மது உடலில் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம். ஆனால் மது, டிஎன்ஏ செல்களை பாதிக்கிறது என்பது உறுதி” என்கிறார் ஆராய்ச்சியாளர்  கேட்டன் படேல். ஆல்கஹாலில் உள்ள அசிட்டால்ஹைடு என்ற நச்சு  உடலுக்கு  ஏற்படுத்தும் பாதிப்புகளை மட்டும்  இதில்  அடையாளப்படுத்தியுள்ளார்கள்.  உடலில் புதிய ரத்த அணுக்கள் உருவாவதைத் தடுத்து,  டிஎன்ஏ செல்களின் இயல்பான  பணியையும் தடுத்து உடலைப் பாதிக்கிறது மதுபானத்திலுள்ள நச்சு.