மூளையை படிக்க முடியுமா?



நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகும் பிளாக் மிரர் அறிவியல் தொடர்தான் இக்கட்டுரைக்கு ஆதாரம். வீடியோ வடிவில் ஒருவரின் நினைவுகளை ப்ளே செய்து பார்க்க  முடிந்தால்  எப்படி யிருக்கும்? பிளாக் மிரர் சீரியலிலும் அப்படி ஒரு காட்சி. குற்றவாளி யின் காதுக்கருகில்  மினி சதுர பொருளை பொருத்திய போலீஸ்காரர் உடனே ரீகாலர் எனும் டிவி வடிவ சாதனத்தை பார்க்கிறார்.  அதில், விசாரிக்கப்படும் நபரின் ஹிஸ்டரியே ஓடுகிறது. இது சாத்தியமா?

‘‘பயம், பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நரம்பு அமைப்புகளை இம் முறையில்  தூண்ட வாய்ப்புள்ளது’’ என்கிறார் கலிஃபோர்னியா பல் கலைக்கழக  ஆராய்ச்சியாளர் மார்க் வீலிஸ்.

“இன்று வரை பயம், மன அழுத்தம்  ஆகியவற்றை கட்டுப்படுத்தும்   தொழில்நுட்பங்கள்  கட்டுப் படுத்தப்படவில்லை.  ஆனால்  அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் டிடெக்டிவ் அதிகாரிகளுக்கு பேருதவியாக அமையும்” என்கிறார் வீலிஸ். இப்படி டெக்னாலஜி எவரெஸ்ட்டாக உயரும்போது,  நம் ஐடியாக்களை திருடுபவர்கள் அதை மாற்றியமைக்கவும் சான்ஸ்  உள்ளதே  என்ற ஐயமும் எழுந்துள்ளது.