க்ரெய்க் வென்டர்



பசுமை பேச்சாளர்கள் 36

அமெரிக்காவைச் சேர்ந்த க்ரெய்க் வென்டர், உலகம் போற்றும் உன்னத உயிரியலாளர். செயற்கை குரோமோசோம் கண்டுபிடித்த அபார ஐக்யூ விஞ்ஞானி. Human Longevity Inc. எனும் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றும் இவர் பல்வேறு அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராகப் பணியாற்றி(றுப)யவர்.

அமெரிக்காவின் உடாவிலுள்ள சால்ட்லேக் சிட்டியில் 1946 ஆம் ஆண்டு பிறந்த க்ரெய்க்,  கலிஃபோர்னியாவிலுள்ள மில்ஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். ஜாலியாக கடலில் சர்ஃபிங் செய்தவர் படிப்பில் சி,டிகிரேடு மாணவர்தான். வியட்நாம் போரில் கடற்படையில் பணியாற்றியவர் உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலகம் புகழும் புகழீட்டினார்.

பயோகெமிஸ்ட்ரி, சைக்காலஜி படிப்புகளை படித்து முடித்தவர், பஃபலோ பல்கலையில் பேராசிரியராக  பணியாற்றியவர் பின்னாளில்  Celera Genomics, The Institute for Genomic Research (TIGR) , J. Craig Venter Institute (JCVI) ஆகிய நிறுவனங்களை உருவாக்கி சாதித்தார். ADHD  குறைபாட்டையும் தன் ஆய்வுப்பணிகளால்  மறக்க வைத்தவர்  க்ரெய்க்.  
 
தாய்பூமி எப்படி  இருக்கவேண்டுமென ஸ்பெஷல் சிந்தனை களைக் கொண்ட க்ரெய்க் வென்டருக்கு உயிரியல் வட்டாரத்தில் Maverick என்று பெயர். இன்டிபென்டன்ட் சிந்தனைக்காரர் என்பது க்ரெய்க்கின் பட்டப்பெயர். பூமியிலுள்ள நுண்ணுயிரிகளை உலகின் கார்பன் வெளியீட்டை குறைக்க  பயன்படுத்தலாம் என்பது வென்டரின் க்ரீன் ஐடியா. “கார்பன்டை  ஆக்சைடை  சேமித்து மீத்தேனாக மாற்றி அதனை எரிபொருளாக பயன்
படுத்தலாம்”  என்கிறார்  க்ரெய்க் வென்டர்.

நிலக்கரியிலிருந்து எரிவாயுவை உருவாக்கும் செயல்முறையை  வேகப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்களிலும், சுத்திகரிப்பு  நிறுவனங்களிலும் கரிம எரிபொருட்களுக்கான புதுப்பிக்கும் ஆற்றல்கள்  என  திடமாக வாதிட்டுள்ளார் க்ரெய்க். “வெறும் பேச்சு என்றில்லாமல் மாற்றத்திற்காக  திட்டமிட்டு உழைப்பது அதனை சாத்தியப்படுத்தும்”  என்கிறார்  க்ரெய்க்  வென்டர்.

பள்ளியை விட்டு இடைநின்ற இவர்,  முறையான அறிவில் முறையை பின்பற்றி ஆய்வுகளை  செய்வதில்லை என்ற புகார்களை கடந்து, டிஎன்ஏவிலுள்ள தகவல்களை டீகோட் செய்த சாமர்த்திய சிகாமணி க்ரெய்க் வென்டர்.

இதனை மக்களிடம் க்ரவுட் ஃபண்டிங் முறையில் வசூலித்து செய்வதுதான்  வென்டரின்  லட்சியம். “பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை என்ற கவலை கிடையாது. நம்மிடமுள்ள ஆயிரக்கணக்கிலுள்ள தீர்வுகளை நாம் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது” என்கிறார் க்ரெய்க் வென்டர்.

ச.அன்பரசு