பிட்ஸ்!




பழக்கப்படாத இடத்தில் நாம் தூங்கும்போது மூளையின் ஒரு பகுதி ஓய்வெடுக்கும், மற்றொரு பகுதி ஆபத்தை எதிர்கொள்ள அலர்ட்டாக இருக்கும்.

ஜப்பானில் 2007 ஆம் ஆண்டு கிஷி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பதவியேற்ற டாமா(1999-2015) என்ற பூனை, பயணிகளின் எண்ணிக்கையை 10% உயர்த்தி வருமானத்தை 1.1 பில்லியன் யென்னாக மாற்றியது.

ஓவியர் வான்கா தன் வாழ்நாளில் விற்றது ஒரே ஒரு ஓவியம்தான்.

ரோம அரசரான டியோகிளெட்டியன் கி.பி. 305 இல், பதவி விலகியவர் மீதி வாழ்வை தன் தோட்டத்தில் முட்டைக்கோஸ்களை வளர்ப்பதில் செலவிட்டார்.

1928 ஆம் ஆண்டில் படகுப் பந்தய வீரர் பாபி பியர்ஸ் பங்கேற்றார். போட்டியில் நீரில் பயணித்த வாத்துகளுக்காக காத்திருந்து துடுப்பசைத்தவர், பின்னாலிருந்து முன்னேறி அந்த ரவுண்டில் எட்டு போட்டியாளர்களை முறியடித்து சாம்பியனானார்.