மின்னுவ தெல்லாம் ஆபத்து!மைக்ரோ பிளாஸ்டிக்குகளின் (Glitter) பளிச்சிடல் இல்லாமல் எந்த மேக்கப்பும் முழுமை அடை வதில்லை. பெண்களின் கண்களுக்கு க்ரீம், முகம் கழுவ பயன்படும் ஃபேஸ்வாஷ்  என  மைக்ரோ பிளாஸ்டிக்குகளின் பயன்பாடு அனைத்து காஸ் மெடிக் பொருட்களிலும் உண்டு.

அமெரிக்காவில்  2015 ஆம்  ஆண்டு மைக்ரோ பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தி  காஸ்மெடிக் ஐட்டங்களை  தயாரிக்கக்  கூடாது என்று சட்டமே போட்டும்
புண்ணியமில்லை.

நாம் பயன்படுத்தும் பொருட் களிலுள்ள  மைக்ரோ பிளாஸ்டிக், ஆறு, ஏரி, கடல் வழியாக மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களை பாதித்து உணவுச்சங்கிலியையும் மெல்ல தகர்க்கிறது. இன்று மறுசுழற்சி முறையில் வாகன டயர்கள், உடைகளாக மாறினாலும் இவற்றின் பயன்பாட்டின் வேகத்தை  மறுபயன்பாடு  இன்னும்  எட்டவில்லை. ‘‘ஏற்கனவே கடலில் பிளாஸ்டிக்குகள் நிறையத் தொடங்கிவிட்டன” என் கிறார் கடல் சூழலியலாளரான செல்சியா ரோச்மன்.