பேட்ரியார்க் பார்த்தலோமே



பசுமை பேச்சாளர்கள் 3

ரோம் மற்றும் கான்ஸ்டான்டி நோபிளின் பிஷப்பான  பார்த்தலோமே,  உலகிலுள்ள 300 மில்லியன்  கிறிஸ் தவர்களின் ஆன்மிக தலைவர். அதையும் தாண்டி க்ரீன் பிஷப் என இவர் அறியப்படுவதற்கு காரணம் ஆர்க்டிக், அமேசான், தனுபே ஆகிய இடங்களிலுள்ள சூழல்  பிரச்னைகளை பிரசாரம் செய்வதுதான். 

1940 ஆம் ஆண்டு  துருக்கியில் பிறந்த  பார்த்தலோமே, இஸ்தான்புல்லில் பெற்ற அடிப்படைக்  கல்விக்குப்  பிறகு,  ஹல்கி நகரில் தியோலாஜிகல் செமினரியில் பட்டப்படிப்பு படித்து பெரும் அங்கீகாரம் பெற்றார். போப்களில் வித்தியாசமாக சூழல் காக்கும் லட்சியத்துடன் இயங்கி வருபவர். மனித உரிமைகள், மத சுதந்திரம், ஈகோலஜி என வலியுறுத்துபவர். 

தற்போது எலிஜா இன்ஸ்டிடியூட்டில் பல்வேறு மதத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு வரு கிறார். “காலம் வேகமாக மாறி வருகிறது. கூடவே பயணிக்கும் மனிதர்களும்தான். ஆனால் உண்மை என்பது மாறாத ஒன்று’’ என்கிறார் பார்த்தலோம.  கிரீக்,துருக்கி, இத்தாலி, ஜெர்மன், ப்ரெஞ்ச், ஆங்கிலம்,லத்தீன் ஆகிய மொழிகளில் கரைகண்ட பார்த்தலோமே, தேவாலயங்களை ஒன்றிணைத்து  மக்களிடையே  சூழல் குறித்த அக்கறைளைக்  கொண்டு  சேர்க்க  விரும்பிய புதுமை விரும்பி.

தனது சூழல் அக்கறைகளுக்கு  பரிசாக  சோபி  விருது  (2002),  அமெரிக்க  அரசின்  தங்க  மெடல் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார் பார்த்தலோமே. “மனிதர்களின் சூழலுக்கும்,  இயற்கையின் சூழலுக்குமான  முரண் தொடங்கியிருக்கிறது. இதன் விளைவாக,  முதலில் பாதிக்கப்படுவது உலகிலுள்ள ஏழைகள்தான்.  விளைவுகள் தாமதமாகலாம்.  ஆனால் அவை நிகழ்ந்தே தீரும் என்பதே உண்மை” என்கிறார்.

துருக்கியின் ஹல்கியிலுள்ள செமினரி மூடப்பட்டபோது,  பிற மதத்தினரை  சுட்டிக்காட்டி பேசியவர், இயற்கை எனும்போது கசப்புகளை மறந்துவிட்டு சிரித்தபடி “பூமியிலுள்ள லிமிட்டான இயற்கை வளங்களை பேராசையால் மனிதர்கள் பெற முயலும்போதுதான்  பிரச்னைகள்  முளை விடுகின்றன. இது நம் அனைவருக்குமான தாய்பூமி” என்பது பார்த்தலோமே வாக்குமூலம்.

பக்தர்களுக்கு   மண்டியிட்டு  பிரார்த்திப்பதோடு  இயற்கை  மாசுபாடு,  கடல்மாசுபாடு பற்றியும்  கவலையோடு  தீர்க்கமாக உரையாடி அதற்கான  மாற்றத்தை  அதிகரிக்க முயற்சிப்பது  பார்த்தலோமவின் வழக்கம். தனது பேச்சில் மெக்சிகோ வளைகுடாப் பகுதியில்  கொட்டப்படும்  ஆயில் மாசுபாடு, இயற்கைப்  பேரிடர்  பற்றியும்  துல்லியமாகப் பேசும் நாளைய உலகிற்கான நம்பிக்கை மனிதர்.

ச.அன்பரசு