டெஸ்லா ட்ரக் பராக் பராக்!



எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டை கலக்கியெடுத்த டெஸ்லா, கனரக ட்ரக் மார்க்கெட்டிலும் எலக்ட்ரிக் யுக்தியை கையிலெடுத்துள்ளது. தற்போது  அறிமுகமாயுள்ள டெஸ்லா ட்ரக், 483 கி.மீ பாயும் சக்தி  கொண்டது.

“எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா, ட்ரக் சந்தையில் நுழைந்ததை வரவேற்கிறேன். பயணிகள் பிரிவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மூலம் முன்பே சாதித்தவர்கள் அவர்கள்” என்கிறார் அமெரிக்காவின் ட்ரக் சங்கத்
தலைவரான கிறிஸ் பியர்.

கேஸ், புரபேன்  எரிபொருள் வாகனங்களுக்கு பெரிய வரவேற்பில்லை என்றாலும் போஸ்ச் மற்றும் நிகோலா  நிறுவனங்கள் இணைந்து 2021க்குள் எட்டு  எலக்ட்ரிக் ட்ரக்குகளை தயாரிக்கவிருக்கின்றன. டெய்ம்லரின் Fuso, கம்மின்ஸின் Aeos ஆகியவையும்  இந்த ரேஸில்  உள்ளன. மினி பஸ், ட்ரக்   ஆகியவை இந்த  வரிசையில்  ரிலீசாக விருக்கின்றன. விற்பனை அதிகரிக்க, சார்ஜிங்  ஸ்டேஷன்களை அதிகரிக்கும் தேவையுள்ளது.