எரிபொருளாகும் காஃபி!காஃபி குடித்தபின் ஃபில்டரில் வீணாகும் காஃபித்தூளை எரிபொருளாக பயன்படுத்தமுடியும்  என பயோபீன் நிறுவனம் சத்தியம் செய்கிறது. பயோபீன், ஷெல் நிறு வனத்தோடு இணைந்து  இந்த பயோஃப்யூல் ஐடியாவை மேம் படுத்த உள்ளது. 

“லண்டனிலுள்ள பஸ்களில் காஃபியிலிருந்து  எடுக்கும்  காஃபி ஆயில் மற்றும் மினரல் ஆயில் ஆகியவற்றை எரிபொருளாக  பயன்ப்படுத்தவிருக்கிறது” என்கிறது ஷெல் நிறுவனம். லண்டனில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் டன்கள் காஃபித்தூள் கழிவுகள் உருவாகின்றன.  இதிலிருந்து  உருவாகும் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடை விட  தீங்கானது. இங்கிலாந்தில் குவித்து வைக்கப்படும் கழிவு,  குப்பைகளுக்கும் வரி உண்டு.

“B20 என்ற பெயரில் காஃபி ஆயில் மற்றும் பிற  ஆயில்களை பயன் படுத்தி எரிபொருளை தயாரிக் கிறோம்”  என்கிறார் பயோபீனின் நிறுவனர் ஆர்தர் கே. 15%  கார்பன் வெளியீட்டை  இந்த  எரிபொருள்  பயன்பாடு தடுக்கிறது.  உடனடி யாக கடைகளில்  கிடைக்காவிட்டாலும்  காஃபி எரிபொருள்  முயற்சியைப் பாராட்டலாம்தானே!