சூழல் காக்கும் உயிரிகள்!




நாய்

நட்பைக்  கடந்த  மனிதர்களின் விசுவாசத்தோழன். தான்சானியாவின் செரங்கெட்டி காடு களில் பல்வேறு உயிரிகளை காக்கும் பணிகளில் ஆயிரம் நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அபார நுகர்வுத்திறன் மூலம் எல்லை தாண்டும் விலங்குகளை முன்னதாக எச்சரிக்கும் திறன் பெற்றது.

கொசு

டெங்கு,யானைக்கால் நோய் உட்பட பல்வேறு தொற்றுநோய்களுக்கு டவுட்டே இல்லாமல் கொசுக்களே காரணம். அமெரிக்காவின் EPA, கொசுக்களை கட்டுப்படுத்த ஆண் கொசுக்களின் மேல் பாக்டீரியா நுண்ணுயிரியை ஏற்றி பெண் கொசுக்களை ஒழிப்பதுதான் பிளான்.

காகம்

அழுகிய பொருட்கள், விலங்குகளை பெருமளவு சுத்தம் செய்வது பாக்டீரியாக்கள் மட்டுமல்ல;  காகங்களும்தான். 2008 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜோஸ்வா கிலெய்ன் TED  நிகழ்வில், குப்பைகளை பொறுக்க காக்கைகளை பயன்படுத்தலாம் என்று சொன்ன ஐடியா இன்று டெஸ்ட்டில்
உள்ளது.